மரணம்
இந்த
நான்கு எழுத்து வார்த்தைதான்
எல்லா பிரச்சனைகளுக்கும்
தீர்வாகவும் முடிவாகவும் இருக்கிறது!
வலிய மரணத்தை
வரவழைத்துக் கொள்ள முடியுமா
என்றால்
பக்கவாததால் பாதிக்கப்பட்ட
என் அப்பாவிற்கு தோல்வியிலும்
என் அப்பாவின் அம்மாவிற்கும்
என் அப்பாவின் தங்கைக்கும்
வெற்றியிலும் முடிந்திருக்கிறது.
பிறக்கும்போதே மரணமும்
முடிவு செய்யப்பட்டது என்று
சித்தாந்தமும் வேதாந்தமும் சொல்வது
உண்மையானால் தற்கொலையும்
ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதா?
மரணம் மீது தீராத
காதல்(!) வந்த வேளையில்
மரணிக்க முயற்சிக்க
அபரிமிதமான தைரியமும்
தேவைப்படுகிறது!
தோல்வியில் முடிந்த தற்கொலைகள்
பிரச்சனைகளை இன்னும்
சிக்கலாக்கத்தான் செய்கின்றன.
மரணத்தை வலிய நோக்கி
காத்திருக்கிறேன்
மனது நிறைந்த வலிகளோடு!
- இசக்கி
ithai padikkaatheerkal!
Monday, November 10, 2014
மரணம்
Sunday, October 5, 2014
Subscribe to:
Posts (Atom)